மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்

உங்கள் கருத்து

நான் மதுரைப் பல்கலைக் கழகத்தின் கீழியங்கும் திருமிகு நாகலட்சுமி அம்மாள் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறேன். தங்கள் வலையகம் பார்த்தேன். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தாங்கள் எழுதிய ‘வருங்கால மொழி சி#’ புத்தகத்தை நானும் எங்கள் துறைத் தலைவியாரும் வாங்கியுள்ளோம். அது எங்களுக்கு உண்மையிலேயே மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் மாணவர்களுக்குக் கம்ப்யூட்டர் நெட்வொர்க் பாடம் எடுத்து வருகிறேன். நெட்வொர்க் பற்றியும் ஜாவா மொழி பற்றியும் தங்கள் வலையகத்தில் வெளியிடுவதை நான் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

- எம்.உத்ரா, எம்.எஸ்சி.

அண்மைக் காலமாக தங்கள் வலையகத்தை ஏன் புதுப்பிக்கவில்லை? புதிய பதிவுகளை விரைவில் எதிர்பார்க்கிறேன்

- சொக்கர்.

மதிப்புக்குரிய சிவலிங்கம் ஐயா, நான் அழகேந்திரம் வசந்தகுமார். லண்டன் மாநகரிலே Guilldhall கல்லூரியில் HND in Computing எனும் கணினி நெறியைப் பயின்றுவருகிறேன்.. உங்களுடைய இணையத் தளத்தினால் எனக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. உங்களைப் போன்ற தமிழ் உள்ளம் கொண்டவர்களினால் என்போன்ற பல தமிழ் மாணவர்கள் நன்மை அடைகிறார்கள். வாழ்க உங்கள் சேவை. வளர்க நம் தமிழ்.

- அழகேந்திரம் வசந்தகுமார், லண்டன்.

அய்யா, தங்கள் வலைப்பதிவை பார்த்தேன். நன்றாக உள்ளது. தங்கள் பணி தொடரவும். பாராட்டுகள்.

- ஸ்ரீதர், திருவம்ணாமலை.

தமிழ் கம்ப்யூட்டரில் நீங்கள் எழுதிய அனைத்துக் கட்டுரைத் தொடர்களையும் படித்துள்ளேன். எளிய நடையில் அமைந்த, எளிதாகப் புரியக்கூடிய உங்கள் கட்டுரைகளை நான் விரும்பிப் படிப்பேன். இன்று உங்கள் வலையகம் கண்டு மிக்க மகிழ்ச்சியுற்றேன். ஜாவா மொழிப் பாடங்களை எதிர்பார்க்கிறேன்.

- எம்.ஆர்.செல்வன௯.

அய்யா தங்களின் வலைத்தளத்தை இன்றுதான் பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் ஒவ்வொரு தலைப்பிலும் தாங்கள் எழுதி இருக்கின்ற கட்டுரைகள் படிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. எதை விடுவது, எதைப் படிப்பது என்று தெரியவில்லை. அத்தனையும் அருமைத் தமிழில் அழகாகத் தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

- அபுல் பாஸர்.

வலைப்பக்கம் அழகாயுள்ளது. மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துகள். சட்டம், தத்துவம், அறிவியல் மற்றும் கணினிப் பாடப் பகுதி பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். கவிதைகள் அருமை.

- ந. பாலசுப்பிரமமியன், சென்னை.

தமிழ் கம்ப்யூட்டரில் வெளிவந்த உங்கள் கேள்வி-பதில் பகுதியின் மிகப்பெரும் ரசிகன் நான். தற்போதுதான் உங்கள் வலையகத்தைப் பார்த்தேன். கணிப்பொறித் தொழிநுட்பர்களுக்கும் புரோகிராமர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கம்ப்யூட்டர் புரோகிராம் மொழிகள் குறித்துத் தமிழில் நூல் எழுதுபவர்கள் மிகவும் குறைவே. பாலகுருசாமிக்குப் பிறகு நீங்கள் ஒருவர் மட்டுமே தமிழ் மக்களுக்குப் புரோகிராம் மொழிகளைத் தமிழில் கற்றுத் தந்துள்ளீர்கள். தயவுசெய்து நவீன புரோகிராம் மொழிகளில் பொருள்நோக்கு நிரலாக்கக் (OOP) கருத்துரு பற்றியும், வடிவாக்கப் பாணிகள் (Design Patterns) பற்றியும் நிறைய எழுதுங்கள்.

- டீ.முகம்மது கம௯ல்.

உங்கள் வலையகம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. நன்றி. மிக நேர்த்தியான வடிவமைப்பு. உங்கள் கணினி சார்ந்த சேவைகளின் இமாலய வளர்ச்சிகண்டு நெஞ்சுநிறை பாராட்டுகள். மேலும் வளர்ந்து மணம் பரப்ப வாழ்த்துக்கள்.

- உ.திருமலைக்குமாரசாமி, கோவை.

2000-ஆம் ஆண்டிலிருந்தே நான் உங்கள் ரசிகன். தமிழ் கம்ப்யூட்டரில் உங்கள் கேள்வி-பதில் பகுதியைத் தொடர்ந்து படித்து வந்துள்ளேன். தற்போதுதான் உங்கள் இணையதளம் கண்டேன். Google வழியாகக் கணிப்பொறி என்ற வார்த்தை கொடுத்துத் தேடும்போது தங்கள் இணையதளம் கிடைத்தது. மிகவும் ஆர்வமூட்டுவதாக உள்ளது.

- முருக செல்வன், இராமநாதபுரம் மாவட்டம்.

உங்கள் வலையகம் கண்டேன். உங்களின் கடுமையான உழைப்பையும், அனைத்துத் துறைகளிலும் உங்கள் அறிவையும் காண முடிந்தது. மிகவும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்

- ஜி.கே.சரவணன், சென்னை.

வலைப்பக்கம் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள். பல ஆண்டுகளாக நீங்கள் கட்டாயம் செய்திட வேண்டும் என்பதை மிக அழகாக, நேர்த்தியாகச் செய்து முடித்துவிட்டீர்கள். "மனக்கோவில் வாசலிலே வரைந்த கோலம்…" கவிதையைப் பலமுறை படித்தேன். பயனுள்ள தளம். தளத்திலேயே கருத்துக்களைத் தெரிவிக்க இடம் ஒதுக்கலாமே.

- முனைவர் பெ.சந்மிரபோஸ், சென்னை.

இன்று உங்கள் வலைப்பதிவைக் காண வாய்த்தது. நிறையச் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

- மாலன், ஆசிரியர௯, புதிய தலைமுறை வார இதழ்.

ரொம்ப அழகாகயுள்ளது. வாழ்த்துக்கள்.

- தி.ந.ச.வெங்கடரங்கன், சென்னை.

தங்களுடைய இணையம் அருமையாக உள்ளது. வாழ்த்துகள். மேலும் தங்களுடைய சட்டம் மற்றும் கணினிப் பாடப் பகுதி பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

- மா.ஆன்டோ பீட்டம், சென்னை.

பார்த்தேன்; படித்தேன்; மகிழ்ந்தேன். கணினியியல் என்றில்லாமல் முழுமையான வலைத்தளமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சொல்லாக்கங்கள் பாராட்டும்படி உள்ளன.

- இலக்குவனார் திருவள்ளுவன், சென்னை.

வலைப்பதிவைக் கண்டேன். இலக்கியவாதி 'இலக்கவியல்'வாதியாகியது மகிழ்ச்சி. நானும் ஏறக்குறைய அப்படித்தான். வாழ்த்துகள். நல்ல தகவல்கள். தொடர்க உங்கள் பணி.

- சி.ம.இளந்தமிழ்.

வலையகம் மிக நன்கு வடிவமைக்கபட்டுள்ளது.

- வெ.வெங்கடேசன், சென்னை.

தங்களின் வலையகம் கண்டேன். மிக நன்றாக உள்ளது. அதிகமான தகவல்களைத் தந்துள்ளீர்கள். மிகவும் பயனுள்ளவை.

- சந்தானம் ஜெயவேலு.

மிக அருமையான வலையகம். என் நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் சொல்வேன்.

- எஸ்.குமர சொரூபம், இலங்கை.

வலையகப் பக்கங்களைப் பார்வையிட்டேன். வலைப்பக்க வடிவமைப்பு, குறிப்பாக, மெனுப் பட்டையும், கிளை மெனுப் பட்டையும் அழகாக உள்ளது. பக்கங்களின் உள்ளடக்கம் வலைப் பயனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளது.

- மா.சீனிவாசன், சென்னை.

தங்களின் வலையகத்தைப் பார்வையிட்டேன். என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. தங்களுடன் நேரில் பேசுவது போலவே உணர்ந்தேன். இதனைத் தயவுசெய்து தொடருங்கள். இந்த வலையகம் முகம் காணாத பல பேர்களுக்கு உதவியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

- அ.ஜெயசீலன். திருச்சி.

தங்களின் வெப் தளத்தைக் கண்டேன். "தத்துவம் என்றால் என்ன? தத்துவம் நமக்குத் தேவையா?" என்ற கட்டுரை தெளிவாகவும், செறிவாகவும் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

- அ.கா.ஈஸ்வரன், சென்னை.

தங்களின் வலையகத்தைக் காண வாய்ப்பளித்தமைக்கு நன்றி. வலையகம் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் வலையகம் பற்றி மற்றவர்களுக்கும் சொல்வேன்.

- எம்.இராமநாதன், சென்னை.

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்