மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்
 

பேச்சுப் போட்டி உரைகள்

என் பிள்ளைகள் இருவரும் பள்ளியில் படிக்கும்போது பல்வேறு தமிழ்ப் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை வென்றனர். அவர்களுக்காக தயாரிக்கப்பட்ட 5 நிமிட உரைகள் இங்கு இடம் பெறுகின்றன. சில கருத்துகள், சில கவிதை எடுத்துக்காட்டுகள் திரும்பத் திரும்ப இடம்பெற்றுள்ளன. போட்டிகள் நடந்த காலமும் களமும் வெவ்வேறானவை. எனவே தலைப்புக்கு ஏற்ற வகையிலே அவை சேர்க்கப்பட்டு பாராட்டையும், கைதட்டையும் பெற்றன.

விழித்தெழு! வெற்றிபெறு!

‘உன்னையே நீ அறிவாய்’ என்று என்றைக்கோ ஓர் அறிஞன் சொல்லிச் சென்றான். உன் பலத்தை – உன் பலவீனத்தை – நீயே அறிந்துகொள்ள வேண்டும் என்பதே அந்த அறிஞன் கருத்து. உன் பலம் எது? உனக்குள்ளே ஒளிந்து கிடக்கும் திறைமை எது? அதை நீ சரியாக அறிந்துகொள். பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்போல் பூங்காற்றில் மறைந்திருக்கும் சங்கீதம்போல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு திறமை ஒளிந்து கிடக்கிறது. அதைமட்டும் நீ சரியாக அடையாளம் காண். அகிலம் உன் கையில்! [.....]

இன்னும் வரும்...

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்