|
|||||||||
|
கணிப்பொறிப் பிணையப் பாடங்கள்
கம்ப்யூட்டர் நெட்வொர்க் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய ஒரு முழுமையான நூல்! ஆங்கிலத்தில்கூட இதுபோன்ற ஒரு நூல் கிடையாது! இன்றே வாங்கிப் படியுங்கள்! நூல் வெளியீடு: பாரதி பகத் பதிப்பகம், கே-2, இராஜேந்திரா குடியிருப்பு, எண்-11, பாபு இராஜேந்திர பிரசாத் முதல்தெரு, சென்னை – 600 006, தொலைபேசி: (044) 23713344, 9444152535. பக்கங்கள் 960. விலை ரூ.550. கணிப்பொறிப் பிணையம் என்றால் என்ன? எதற்கு? எவ்வாறு? .....தனிமனிதன் சமூகம் ஆவதில்லை.....மனிதர்கள் சேர்ந்து சமூகம் ஆகும்போது மனித வாழ்க்கை பொருளுடையதாகிறது. தனிமனிதன் சாதிக்க முடியாதவற்றைச் சமூகம் சாதித்துக் காட்டுகிறது....தனித்த கணிப்பொறிகள் பல பிணைக்கப்பட்டுப் ‘பிணையம்’ ஆகும்போது, ‘சமூகம்’ போலச் சக்தி வாய்ந்ததாகி விடுகிறது.....கோப தாபங்கள், சண்டை சச்சரவுகள் இல்லாத ‘கணிப்பொறிச் சமூகம்’ மனித சமூகத்துக்கு மகத்தான சக்தியை வழங்குகிறது. [.....] பிணையத் தகவல் பரிமாற்ற ஊடகங்கள் தகவலைப் பரிமாறிக் கொள்ள ஊடகம் தேவை.....புறாவை அஞ்சல்காரராய்ப் பயன்படுத்தியுள்ளோம். அன்னத்தைத் தூதுவிட்ட கதையும் அறிவோம். .....தந்திக் கம்பிகளில் மின்சார மொழியில் தகவல் அனுப்பும் நுட்பம் கண்டோம்.....தொலைபேசி வழியே உரையாடிக் கொள்கிறோம்.....தகவலை ஏந்திச் செல்ல ஒருவகை ஊடகத்தைப் பயன்படுத்தி வந்துள்ளோம். அதுபோலவே கணிப்பொறிப் பிணையங்களில் தகவல் பரிமாற்றம் நடைபெறவும் ஊடகம் தேவை [.....] .....பிணையத்தின் வகை, பரப்பு இவற்றைப் பொறுத்து அதில் பயன்படுத்தப்படும் வன்பொருள்களும் வேறுபடும். இத்தகைய வன்பொருள் சாதனங்களைப் புரிதல் கருதி மூன்றாக வகைப்படுத்தலாம். (1) குறுகிய பரப்பில் செயல்படும் பிணையங்களில் கணிப்பொறிகளைப் பிணைக்கத் தேவையானவை. (2) அத்தகைய பிணையங்களைக் கூடுதல் பரப்புக்கு விரிவுபடுத்தத் தேவையானவை. (3) பல சிறிய பிணையங்களை இணைத்துப் பெரிய பரந்த பிணையத்தை நிறுவத் தேவையானவை. [.....] வன்பொருள்களைப் பயன்படுத்திப் பிணையத்தைக் கட்டமைத்தவுடனே கணிப்பொறிகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் நடைபெற்று விடாது. .....பிணையத்தில் தகவல் பரிமாற்றம் நடைபெறக் குறிப்பிட்ட வகையான தனிச்சிறப்பு மென்பொருள்கள் தேவை. அவற்றுள் பிணைய இயக்க முறைமை, தகவல் தொடர்பு நெறிமுறைகள், ஒவ்வொரு பிணையப் பயன்பாட்டுக்குமான வழங்கி, நுகர்வி மென்பொருள்கள் ஆகியவை முக்கியமானவை. [.....] கணிப்பொறிப் பிணையங்களின் வளர்ச்சி ...தொலை தகவல் தொடர்பு (Telecommunication) மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் (Information Technology) ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக பிணையத் தொழில்நுட்பத்திலும் மாபெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. சிறுசிறு அலுவலகங்களிலும் சிறிய, நடுத்தர, பெரிய வணிக நிறுவனங்களிலும் கணிப்பொறிப் பிணையங்கள் நிறுவப்பட்டன. ஒரு வளாகத்துக்குள் இயங்கும் குறும்பரப்புப் பிணையங்கள் (Local Area Network) மட்டுமின்றி, நாடு தழுவிய விரிபரப்புப் பிணையங்களும் (Wide Area Network) மிகப்பெரும் அளவில் வளர்ச்சி கண்டன. [.....] கணிப்பொறிப் பிணையங்களின் வகைப்பாடு ...செயற்பரப்பின் அடிப்படையில் கணிப்பொறிப் பிணையங்களை வகைப்படுத்தலே முதன்மையான வகைப்பாடாகக் கருதப்படுகிறது. பிற வகைப்பாடுகளைக் கணிப்பொறி வல்லுநர்கள் குறிப்பிட்ட தருணங்களில் மட்டுமே மேற்கொள்கின்றனர். மேலும் எந்தவொரு வகைப்பாட்டின் கீழும் இடம்பெறும் ஒரு பிணைய வகையினத்தைப் பெரும்பாலும் செயற்பரப்பின் அடிப்படையிலான வகைப்பாட்டில் ஓர் உள்-வகையினமாக (Sub-Category) வகைப்படுத்திவிட முடியும். [.....] ஆக, அக இணையத்தின் மூன்று முக்கிய கூறுகளை இவ்வாறு பட்டியலிடலாம்:
(1) ஒரு நிறுவனத்தின் தனியார் பிணையம். இன்னும் பாடங்கள் விரைவில்... |
|
|||||||
இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்
|