மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்
 

கணிப்பொறியியல் கலைச்சொல் திரட்டு

2010-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து, உலகத் தமிழ் இணைய மாநாடும் நடைபெற்றது. மாநாட்டு வளாகத்தில் செம்மொழி மாநாட்டுக்கும், இணைய மாநாட்டுக்கும் எனத் தனித்தனிக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழ் இணைய மாநாட்டுக் கண்காட்சி அரங்க அமைப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அரங்கப் பொறுப்பாளர் திரு. ஆனந்தன் (வள்ளி சாஃப்ட்வேர்) என்னைத் தொடர்பு கொண்டார். கணிப்பொறியியல் கலைச்சொற்களைப் பெரிய பதாகைகளில் அச்சிட்டு கண்காட்சியில் இடம்பெறச் செய்தால் சிறப்பாக இருக்கும் எனக் கருத்துத் தெரிவித்தார். ஐந்நூறு கலைச்சொற்களைத் தொகுத்து இரண்டு நாட்களில் அனுப்பி வைக்க முடியுமா எனக் கேட்டார். நானும் உடனே ஒப்புக் கொண்டேன்.

இரண்டு நாட்களில் ஆறு தலைப்புகளில் ஏறத்தாழ ஐந்நூற்று இருபது சொற்களைத் தொகுத்து அனுப்பி வைத்தேன். மாநாட்டுக்கு முந்தைய நாள் அச்சகத்திலிருந்து செல்பேசியில் பேசினார். வேர்டு கோப்பிலிருந்து அச்சிடுவதில் சிக்கல் இருப்பதாகவும், பிடிஎஃப் வடிவில் உடனே மாற்றி அனுப்பச் சொன்னார். அவ்வாறே மாற்றி மின்னஞ்சலில் உடனே அனுப்பி வைத்தேன். அச்சிடப்பட்டதா, கண்காட்சியில் இடம்பெற்றதா என்பதுபற்றி அதன்பிறகு அவரிடமிருந்து தகவல் இல்லை. தமிழ் இணைய மாநாட்டுக்கான என்னுடைய ஆய்வுக் கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டதால் நான் மாநாட்டில் கலந்துகொள்ளக் கோவை சென்றேன்.

மாநாட்டு நடவடிக்கைகளில் மூழ்கிவிட்டதால் கலைச்சொற்கள் பற்றி மறந்தே போனேன். இரண்டாம் நாள் மாநாட்டில் பல நண்பர்கள் என்னிடம் வந்து பாராட்டுத் தெரிவித்தனர். என்னுடைய கலைச்சொல் திரட்டுக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளதாகவும், அதற்குப் பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பு இருப்பதாகவும் நண்பர்கள் தெரிவித்தனர். தினத்தந்தி நிருபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னைப்பற்றி ஒரு சிறிய பேட்டி எடுத்தார்.

கண்காட்சிக்குச் சென்று பார்வையிட விரும்பினேன். ஆனால் பார்வையாளர்கள் ஆயிரக் கணக்கில் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்குக் கியூ வரிசையில் நின்று கண்காட்சி அரங்குக்குள் சென்று கொண்டிருந்தனர். நான் சிறப்புப் பார்வையாளராகக் கண்காட்சிக்குள் சென்று பார்வையிட்டேன். கண்காட்சி அரங்கு இரண்டு நீண்ட பகுதியாக அமைந்திருந்தது. இரண்டு பகுதியையும் இணைக்கும் பாதையில் ஏழெட்டு அடி உயரத்தில் கலைச்சொற்களின் பட்டியல் மிகப்பெரிய எழுத்துகளில் அச்சிட்டு ஒட்டப்பட்டிருந்தது. ‘தமிழால் முடியும்’ என்னும் தலைப்பில் கலைச்சொற்கள் வெளியிடப்பட்டிருந்ததால், பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது.

கண்காட்சியைக் காண வந்தவர்களில் பலரும் கலைச்சொல் பட்டியலை நின்று படித்துவிட்டே சென்றனர். சிலர் கைக்குக் கிடைத்த தாள்களில் கலைச்சொற்களை எழுதிக் கொண்டனர். தாள் கிடைக்காதவர்கள் தங்கள் செல்பேசியிலும் கேமராவிலும் படம் பிடித்துக் கொண்டனர். கலைச்சொல் பட்டியல் அச்சுப் பிரதியாகக் கிடைக்குமா என்று பலரும் கண்காட்சி அலுவலகத்தில் கேட்டுச் சென்றனர்.

மக்கள் கூட்டம் அலைமோதுவதைக் கண்ட பத்திரிகை நிருபர்கள் கலைச்சொல் பட்டியலைப் பார்வையிட்டனர். கேமராக்களில் படம்பிடித்துக் கொண்டனர். இந்து, தினமணி, தினத்தந்தி, தினமலர் ஆகிய பத்திரிகைகளில் கலைச்சொற்களின் பட்டியல் பற்றிய செய்தி படத்துடன் வெளிவந்தது. காண்க:

இடப் பற்றாக்குறை காரணமாக மாநாட்டுக் கண்காட்சி அரங்கில் ஏறத்தாழ 350 சொற்களே இடம்பெற்றிருந்தன. கலைச்சொற்களின் முழுப் பட்டியலைக் கீழே காண்க (25-01-2013 -இல் திருத்தப்பட்டது):

(1) பொது (General)

Computer --- கணிப்பொறி / கணினி
Personal Computer --- சொந்தக் கணிப்பொறி
Desktop Computer --- மேசைக் கணிப்பொறி
Laptop Computer --- மடிக் கணிப்பொறி
Notebook Computer --- ஏட்டுக் கணிப்பொறி
Handheld Computer --- கையகக் கணிப்பொறி
Portable Computer --- கையடக்கக் கணிப்பொறி
Tablet PC --- பலகைக் கணிப்பொறி / கணிப்பலகை
Mini Computer --- குறுமுகக் கணிப்பொறி
Mainframe Computer --- பெருமுகக் கணிப்பொறி
Super Computer --- மீத்திறன் கணிப்பொறி
Real Time System --- நிகழ்நேரக் கணிப்பொறி
Multitasking --- பல்பணியாக்கம்
Hardware --- வன்பொருள்
Software --- மென்பொருள்
Firmware --- நிலைபொருள்
CPU --- மையச் செயலகம்
Monitor --- திரையகம்
Touch Screen --- தொடுதிரை
Flat Monitor --- தட்டைத் திரையகம்
Color Monitor --- வண்ணத் திரையகம்
LCD Monitor --- நீர்மப் படிகத் திரையகம்
Keyboard --- விசைப்பலகை
Keyboard Driver --- விசைப்பலகை இயக்கி
Function Key --- பணிவிசை
Keypad --- விசைத்தளம்
Touchpad --- தொடுதளம்
Mouse --- சுட்டி
Track Ball --- கோளச் சுட்டி
Printer --- அச்சுப்பொறி
Dot Matrix Printer --- புள்ளியணி அச்சுப்பொறி
Inkjet Printer --- மைபீச்சு அச்சுப்பொறி
Laser Printer --- லேசர் அச்சுப்பொறி
Impact Print --- தொட்டச்சு
Non-impact Print --- தொடாஅச்சு
Scanner --- வருடி
Plotter --- வரைவி
Hard Disk --- நிலைவட்டு
Compact Disk (CD) --- குறுவட்டு
DVD --- பல்திறன் வட்டு
Magnetic Disk --- காந்த வட்டு
Electro Magnetic Disk --- மின்காந்த வட்டு
Laser Disk --- லேசர் வட்டு
Blue Ray Disk --- நீலக்கதிர் வட்டு
Optical Disk --- ஒளி வட்டு
Disk Drive --- வட்டு இயக்ககம்
Floppy Disk --- நெகிழ்வட்டு
Magnetic Tape --- காந்த நாடா
Tape Drive --- நாடா இயக்ககம்
Tape Catridge --- நாடாப் பேழை
Tape Reader --- நாடாப் படிப்பி
Mocroprocessor --- நுண்செயலி
Chip --- சில்லு
Memory --- நினைவகம்
RAM --- அழியா நினைவகம்
ROM --- நிலையா நினைவகம்
Main Memory --- முதன்மை நினைவகம்
Expanded Memory --- விரிவாக்க நினைவகம்
Extended Memory --- நீட்டிப்பு நினைவகம்
Buffer Memmory --- இடையக நினைவகம்
Cache Memory --- இடைமாற்று நினைவகம்
Flash Memory --- அதிவிரைவு நினைவகம்
Virtual Memory --- மெய்நிகர் நினைவகம்
Virtual Disk --- மெய்நிகர் வட்டு
Memory Card --- நினைவக அட்டை
Memory Stick --- நினைவகக் குச்சி
Pen Drive --- பேனாச் சேமிப்பகம்
Motherboard --- தாய்ப்பலகை
Expansion Slot --- விரிவாக்கச் செருகுவாய்
Socket --- பொருத்துவாய்
Port --- துறை
Bus --- பாட்டை
Modem --- இணக்கி
Operating System --- இயக்க முறைமை
Application Softwate --- பயன்பாட்டு மென்பொருள்
Memory Management --- நினைவக மேலாண்மை
File Management --- கோப்பு மேலாண்மை
Peripheral Management --- புறச்சாதன மேலாண்மை
File --- கோப்பு
File Extention --- கோப்பு இனப்பெயர்
File System --- கோப்பு முறைமை
Directory --- கோப்பகம்
Root Directory --- மூலக் கோப்பகம்
Sub-directory --- உட்கோப்பகம்
Folder --- கோப்புறை
Sub-folder --- உட்கோப்புறை
Virus --- நச்சுநிரல்
Anti-virus --- நச்செதிர்ப்பி
Viral Infection --- நச்சுநிரல் தொற்று
Malware --- தீங்குநிரல்
Spyware --- உளவுநிரல்
Font --- எழுத்துரு
Multimedia --- பல்லூடகம்
Text --- உரை
Graphics --- வரைகலை
Animation --- அசைவூட்டம்
Audio --- கேட்பொலி
Video --- நிகழ்படம்
Stream --- தாரை
Abort --- முறி
Adapter --- தகவி
Access --- அணுக்கம்
Activation --- இயக்குவிப்பு
Space --- இடவெளி
Alert --- விழிப்பூட்டு
Analog --- உவமம்
Digital --- துடிமம்
Signal --- குறிகை
Backup --- காப்புநகல்
Bandwidth --- கற்றையகன்மை
Benchmark --- திறன்மதிப்பீடு
Bio-informatics --- உயிரித் தகவலியல்
Boot --- தொடக்கு
Crash --- செயல்முடக்கம்
Platform --- பணித்தளம்
Cross Platform --- பல்பணித்தளம்
Cursor --- காட்டி
Configuration --- தகவமைப்பு
Customize --- தனிப்பயனாக்கு
Credit Card --- கடன் அட்டை
Debit Card --- பற்று அட்டை
Cash Card --- பண அட்டை
Smart Card --- சூட்டிகை அட்டை
Defrag --- நெருங்கமை
Modulation --- பண்பேற்றம்
Demodulation --- பண்பிறக்கம்
Specification --- வரையறுப்பு
Concept --- கருத்துரு
Embed --- உட்பொதி
Embedded Chip --- உட்பொதி சில்லு
Embedded System --- உட்பொதி முறைமை
Emulation --- போலாக்கம்
Emulator --- போலாக்கி
Simulation --- பாவிப்பு
Simulator --- பாவிப்பி
Entity --- உருபொருள்
External Storage --- புறநிலைச் சேமிப்பு
Internal Storage --- அகநிலைச் சேமிப்பு
Feedback --- பின்னூட்டம்
Open Source Software --- வெளிப்படை மூலநிரல் மென்பொருள்
Free Software --- கட்டறு மென்பொருள்
Freeware --- இலவச மென்பொருள்
Global Positioning System --- உலக இருப்பிட முறைமை
Glyph Encoding --- சிற்பக் குறியாக்கம்
Install --- நிறுவு
Reinstall --- மறுநிறுவு
Morphing --- உருமாற்றம்
Computing --- கணிப்பணி
Multiuser System --- பல்பயனர் முறைமை
Multiuser Environment --- பல்பயனர் பணிச்சூழல்
Outsourcing --- அயலாக்கம்
Piracy --- களவுநகலாக்கம்
Privacy --- மறைபொதுக்கம்
Pixel --- படப்புள்ளி
Pop-up Window --- மேல்விரி சாளரம்
Pop-up Menu --- மேல்விரி பட்டி
Project --- திட்டப்பணி
Prompt --- தூண்டி
Zoom-in --- அண்மைக் காட்சி
Zoom-out --- தொலைவுக் காட்சி
Write-protect --- எழுது-தடுப்பு
Icon --- சின்னம்
Shortcut --- குறுவழி
Standard --- தரப்பாடு
Standardize --- தரப்படுத்து
Task Bar --- பணிப் பட்டை
Status Bar --- நிலைமைப் பட்டை
Telemedicine --- தொலைமருத்துவம்
Troubleshooting --- பழுதுகண்டு நீக்கல்

(2) அலுவலகப் பயன்பாடுகள் (Office Applications)

Word Processor --- சொல்செயலி
Spreadsheet --- விரிதாள்
Application Package --- பயன்பாட்டுத் தொகுப்பு
Office Suite --- அலுவலகக் கூட்டுத் தொகுப்பு
Data --- தரவு
Database --- தரவுத்தளம்
Presentation --- முன்வைப்பு
Document --- ஆவணம்
New --- புதிது
Open --- திற
Save --- சேமி
Save As --- எனச் சேமி
Close --- மூடு
Delete --- அழி
Remove --- நீக்கு
Edit --- திருத்து
Find --- கண்டறி
Replace --- மாற்றிடு
Find and Replace --- கண்டறிந்து மாற்றிடு
Goto --- அங்குச் செல்
Undo --- செய்தது தவிர்
Redo --- தவிர்த்தது செய்
Erase --- அழி
Ignore --- புறக்கணி
Format --- வடிவூட்டு / வடிவூட்டம்
Insert --- செருகு
View --- காட்சி
Page Layout --- பக்க உருவரை
Page Break --- பக்க முறிவு
Header --- முகப்பி
Footer --- முடிப்பி
Marquee --- நகர் உரை
Print --- அச்சிடு
Print Preview --- அச்சு முன்காட்சி
Cut --- வெட்டு
Copy --- நகலெடு
Paste --- ஒட்டு
Move --- இடம்பெயர்
Indent --- உள்தள்ளல்
Justify --- ஓரச்சீர்மை
Align --- நேரமை
Alignment --- நேரமைவு
Hyphen --- பிரிகோடு
Hyphenation --- சொல்பிரிகை
Padding --- இட்டுநிரப்பல்
Margin --- ஓரவெளி
Orientation --- திசைமுகம்
Portrait --- நீள்மை
Landscape --- அகன்மை
Page Break --- பக்க முறி
Bold --- தடிப்பு
Italics --- சாய்வு
Underline --- அடிக்கோடு
Footnote --- அடிக்குறிப்பு
Endnote --- கடைக்குறிப்பு
Table --- அட்டவணை
Worksheet --- பணித்தாள்
Row --- நெடுக்கை
Column --- கிடக்கை
Cell --- கலம்
Formula --- வாய்பாடு
Label --- சிட்டை
Macro --- குறுநிரல்
Sorting --- வரிசையாக்கம்
Filter --- வடிகட்டி
Font --- எழுத்துரு
Bullet --- பொட்டு
Bulleted List --- பொட்டிட்ட பட்டியல்
Template --- வார்ப்புரு
User Friendly --- பயனர் தோழமை
Graph --- வரைபடம்
Chart --- நிரல்படம்
Gridlines --- கட்டக் கோடுகள்
Horizontal --- கிடைமட்டம்
Vertical --- செங்குத்து
Image --- படிமம்
Window --- சாளரம்
Dialogue Box --- உரையாடல் பெட்டி
Tab --- கீற்று
Tab Key --- தத்தல் விசை
Tag --- ஒட்டு
Text Box --- உரைப்பெட்டி
Check Box --- சரிக்குறிப் பெட்டி
List Box --- பட்டியல் பெட்டி
Command Button --- கட்டளைப் பொத்தான்
Dropdown List --- கீழ்விரி பட்டியல்
Menu --- பட்டி
Menu Options --- பட்டித் தேர்வுகள்
Menu Bar --- பட்டிப் பட்டை
Menu Item --- பட்டி உறுப்பு
Tool Bar --- கருவிப் பட்டை
Scroll Bar --- உருள் பட்டை
Wizard --- வழிகாட்டி
Navigate --- வழிச்செலுத்து
Orphan --- உறவிலி
Widow --- துணையிலி
Pane --- பாளம்
Panel --- பலகம்
Frame --- சட்டகம்
Border --- கரை
Shading --- நிழலாக்கம்
Filling --- நிரப்பல்
Fill Color --- நிறம் நிரப்பு
Style --- பாணி
Pattern --- தோரணி
Wordwrap --- வரிமடக்கு
Wallpaper --- முகப்போவியம்

(3) இணையம் (Internet)

Internet --- இணையம்
World Wide Web --- வைய விரிவலை
Net / Web --- வலை
Cyper Space --- மின்வெளி / இணையவெளி
Cyber Community --- மின்வெளிச் சமூகம்
Cyber Law --- இணையச் சட்டம் / மின்வெளிச் சட்டம்
Cyber Crime --- இணையக் குற்றம் / மின்வெளிக் குற்றம்
Netizen --- வலைவாசி
Browser --- உலாவி
Internet Browser --- இணைய உலாவி
Web Browser --- வலை உலாவி
Internet Browsing Centre --- இணைய உலா மையம்
Internet Phone --- இணையப் பேசி
Internet Protocol --- இணைய நெறிமுறை
Internet Site --- இணையத்தளம்
Internet Service Provider --- இணையச் சேவையாளர்
Search Engine --- தேடுபொறி
Website --- வலையகம்
Webpage --- வலைப்பக்கம்
Link --- தொடுப்பு
Hyperlink --- மீத்தொடுப்பு
Hyper Media --- மீவூடகம்
Hyper Text --- மீவுரை
Bookmark --- பக்கக்குறி
Cookie --- நட்புநிரல்
Online --- நிகழ்நிலை
Offline --- அகல்நிலை
Download --- பதிவிறக்கம்
Upload --- பதிவேற்றம்
Blog --- வலைப்பதிவு / வலைப்பூ
E-mail --- மின்னஞ்சல்
E-commerce --- மின்வணிகம்
E-zine --- மின்னிதழ்
E-cash --- மின்பணம்
E-Governance --- மின் ஆளுகை
E-Shopping --- மின் கடைச்செலவு
E-Publishing --- மின் பதிப்பாக்கம்
E-Group --- மின்குழு
E-Community --- மின்சமூகம்
Social Network --- சமூகப் பிணையம்
Favorites --- கவர்விகள்
Inbox --- மடல்பெட்டி
Outbox --- செல்மடல் பெட்டி
Spam Mail --- குப்பை மடல்
Contacts --- தொடர்புகள்
Address Book --- முகவரிப் புத்தகம்
Mailing List --- அஞ்சல் குழு
Attachment --- உடனிணைப்பு
News Group --- செய்திக் குழு
Portal --- வலைவாசல்
Domain --- களம்
Domain Name --- களப்பெயர்
Domain Server --- கள வழங்கி
Web Server --- வலை வழங்கி
Web Client --- வலை நுகர்வி
Web Application --- வலைப் பயன்பாடு
Web Services --- வலைச் சேவைகள்
Online Transaction --- நிகழ்நிலைப் பரிமாற்றம்
Virtual Reality --- மெய்நிகர் நடப்பு
Broadband --- அகல்கற்றை
Webcast --- வலைபரப்பு
Bulletin Board --- அறிக்கைப் பலகை
Net Banking --- இணைய வங்கிச் சேவை
Mobile Banking --- செல்பேசி வங்கிச் சேவை
Cloud --- அயன்மை
Cloud Computing --- அயல்கணிச் சேவை
Cloud Provider --- அயல்கணிச் சேவையாளர்
Cloud Services --- அயன்மைச் சேவைகள்
External Cloud --- புறநிலை அயன்மை
Internal Cloud --- அகநிலை அயன்மை

(4) பிணையம் (Network)

Network --- பிணையம்
Server --- வழங்கி
Client --- நுகர்வி
File Server --- கோப்பு வழங்கி
Node --- கணு
Terminal --- முனையம்
Dumb Terminal --- ஊமை முனையம்
Intelligent Termianal --- அறிவார்ந்த முனையம்
Remote Terminal --- சேய்மை முனையம்
Fat Client --- கொழுத்த நுகர்வி
Thin Client --- மெலிந்த நுகர்வி
Workstation --- பணிநிலையம்
Peer --- நிகரி
Stand-alone --- தனித்தியங்கி
Connection --- இணைப்பு
Connector --- இணைப்பி
Male Connector --- நுழை இணைப்பி
Female Connector --- துளை இணைப்பி
Network Adapter --- பிணையத் தகவி
Network Interface Card --- பிணைய இடைமுக அட்டை
Network Topology --- பிணைய இணைப்புமுறை
Cable --- வடம்
Coaxial Cable --- இணையச்சு வடம்
Optical Fiber Cable --- ஒளி இழை வடம்
Twisted Pair Cable --- முறுக்கிணை வடம்
Infrared Ray --- அகச்சிவப்புக் கதிர்
Radio Wave --- வானலை
Microwave --- நுண்ணலை
Baseband --- அடிக்கற்றை
Wideband --- விரிகற்றை
Braoadband --- அகல்கற்றை
Layer --- அடுக்கு
Protocol --- நெறிமுறை
Packet --- பொதி
Hub --- குவியம்
Switch --- தொடர்பி
Bridge --- இணைவி
Router --- திசைவி
Brouter --- இணைத்திசைவி
Gateway --- நுழைவி
Proxy --- பதிலி
Priority --- முன்னுரிமை
Local Area Network (LAN) --- குறும்பரப்புப் பிணையம்
Campus Area Network (CAN) --- வளாகப் பரப்புப் பிணையம்
Metro Area Network (MAN) --- மாநகர்ப் பரப்புப் பிணையம்
Wide Area Network (WAN) --- விரிபரப்புப் பிணையம்
Global Area Network (GAN) --- புவிப்பரப்புப் பிணையம்
Value Added Network (VAN) --- மதிப்பேற்று பிணையம்
Virtual Private Network (VPN) --- மெய்நிகர் தனியார் பிணையம்
Peer-to-Peer Network --- நிகரிடைப் பிணையம்
Neural Network --- நரம்பணுப் பிணையம்
Wireless Network --- கம்பியில்லாப் பிணையம்
Intranet --- அக இணையம்
Extranet --- புற இணையம்
Security --- பாதுகாப்பு
Firewall --- தீச்சுவர்
Cryptography --- மறைக்குறியீட்டியல்
Cypher --- மறையெழுத்து
Encypher --- மறையெழுத்தாக்கம்
Decypher --- மறையெழுத்துவிலக்கம்
Encoding --- குறியாக்கம்
Decoding --- குறிவிலக்கம்
Encryption --- மறையாக்கம்
Decryption --- மறைவிலக்கம்
Public Key --- பொதுத் திறவி
Private Key --- தனித் திறவி
Algorithm --- தீர்வுநெறி
Username --- பயனர் பெயர்
Password --- கடவுச்சொல்
Login --- உள்நுழை
Logout --- வெளியேறு
System Administrator --- முறைமை நிர்வாகி
Terminal --- முனையம்
Remote Terminal --- சேய்மை முனையம்
Share --- பகிர்வு
File Sharing --- கோப்புப் பகிர்வு
Unicast --- ஒருமுனைப் பரப்பு
Multicast --- பல்முனைப் பரப்பு
Broadcast --- அலைபரப்பு
Rights --- உரிமைகள்
Privileges --- சலுகைகள்
Multiplexing --- சேர்த்திணைப்பு
Demultiplexing --- பிரித்தெடுப்பு

(5) தரவுத்தளம் (Database)

Data --- தரவு
Database --- தரவுத்தளம்
Database Management System --- தரவுத்தள மேலாண்மை முறைமை
Table --- அட்டவணை
Record --- ஏடு
Field --- புலம்
Sorting --- வரிசையாக்கம்
Indexing --- சுட்டுகையாக்கம்
Relational Database --- உறவுநிலைத் தரவுத்தளம்
Distributed Database --- பகிர்ந்தமை தரவுத்தளம்
Query --- வினவல்
Sort Key --- வரிசையாக்கத் திறவி
Index Key --- சுட்டிகைத் திறவி
Primary Key --- முதன்மைத் திறவி
Foreign Key --- அயல் திறவி
Unique Key --- தனியொரு திறவி
Criteria --- வரன்முறை
Criteria Range --- வரன்முறை வரம்பு
Data Administeration --- தரவு நிர்வாகம்
Data Analysis --- தரவுப் பகுப்பாய்வு
Data Bank --- தரவு வங்கி
Data Mine --- தரவுச் சுரங்கம்
Data Warehouse --- தரவுக் கிடங்கு
Data Consistency --- தரவு ஒத்திணக்கம்
Data Integrity --- தரவு நம்பகம்
Data Conversion --- தரவு இனமாற்றம்
Data Manipulation --- தரவுக் கையாள்கை
Data Processing --- தரவுச் செயலாக்கம்
Data Validation --- தரவுத் தகுதிபார்ப்பு
Data Verification --- தரவுச் சரிபார்ப்பு
Data Compression --- தரவு அமுக்கம்
Field Lock --- புலப் பூட்டு
Record Lock --- ஏட்டுப் பூட்டு
Normal Form --- இயல்பு வடிவம்
Normalization --- இயல்பாக்கம்
Purge --- அழித்தொழி
Update --- புதுப்பி
Duplicate --- இரட்டிப்பு
Redundancy --- மிகைமை
Report --- அறிக்கை
Commit --- உறுதிசெய்
Undelete --- மீட்டெடு
Retrieve --- மீட்டளி
Restore --- மீட்டமை
Synonym --- மாற்றுப்பெயர்
Trigger --- விசைவி
(6) நிரலாக்கம் (Programming) ---
Program --- நிரல்
Code --- குறிமுறை
Source Code --- மூலக் குறிமுறை
Flow chart --- பாய்வுப் பட்ம்
Statement --- கூற்று
Command --- கட்டளை
Instruction --- ஆணை
Instruction Set --- ஆணைத் தொகுதி
Translator --- பெயர்ப்பி
Interpreter --- ஆணைபெயர்ப்பி
Compiler --- நிரல்பெயர்ப்பி
Low Level Language --- அடிநிலை மொழி
Middle Level Language --- இடைநிலை மொழி
High Level Language --- உயர்நிலை மொழி
Assembly Language --- சில்லு மொழி
Binary Language --- இரும மொழி
Decimal --- பதின்மம்
Octal --- எண்மம்
Hexa Decimal --- பதினறுமம்
Data Type --- தரவினம்
Character --- குறியுரு
Numeric --- எண்வகை
Alphanumeric --- எழுத்தெண்வகை
Digit --- இலக்கம்
Floating Point --- மிதப்புப் புள்ளி
Single Precision --- ஒற்றைத் துல்லியம்
Double Precision --- இரட்டைத் துல்லியம்
Priority --- முன்னுரிமை
String --- சரம்
Literal --- மதிப்புரு
Null --- வெற்று
Null String --- வெற்றுச் சரம்
Null Pointer --- வெற்றுச் சுட்டு
Constant --- மாறிலி
Variable --- மாறி
Range --- வரம்பு
Overflow --- மிகைவழிவு
Operator --- செயற்குறி
Arithmatic Operator --- கணக்கீட்டுச் செயற்குறி
Modulo Operator --- வகுமீதி செயற்குறி
Unary Operator --- ஒருமச் செயற்குறி
Binary Operator --- இருமச் செயற்குறி
Expression --- கோவை
Pointer --- சுட்டு
Reference --- குறிப்பி
Array --- அணி
Matrix --- அணிக்கோவை
Stack --- அடுக்கு
Linked List --- தொடுப்புப் பட்டியல்
Input --- உள்ளீடு
Output --- வெளியீடு
Exception --- விதிவிலக்கு
Run Time Error --- இயக்க நேரப் பிழை
Object Oriented Programming --- பொருள்நோக்கு நிரலாக்கம்
Encaptulation --- உறைபொதியாக்கம்
Inheritance --- மரபுரிமம்
Polymorphism --- பல்லுருவாக்கம்
Operator Overloading --- செயற்குறி பணிமிகுப்பு
Function Overloading --- செயல்கூறு பணிமிகுப்பு
Data Abstraction --- தரவு அருவம்
Data Protection --- தரவுக் காப்பு
Data Hiding --- தரவு மறைப்பு
Garbage Collection --- நினைவக விடுவிப்பு
Early Binding --- முந்தைய பிணைப்பு
Late Binding --- பிந்தைய பிணைப்பு
Dynamic Binding --- இயங்குநிலைப் பிணைப்பு
Static Binding --- நிலைத்த பிணைப்பு
Class --- இனக்குழு
Derived Class --- தருவித்த இனக்குழு
Object --- பொருள்
Object Program --- இலக்கு நிரல்
Method --- வழிமுறை
Event --- நிகழ்வு
Event Handling --- நிகழ்வுக் கையாள்கை
Event Handler --- நிகழ்வுக் கையாளி
Event Driven Programming --- நிகழ்வு முடுக்க நிரலாக்கம்
Property --- பண்பு
Attribute --- பண்பியல்பு
Interface --- இடைமுகம்
Decision Making Command --- தீர்மானிப்புக் கட்டளை
Branching Statement --- கிளைபிரி கூற்று
Declaration Statement --- அறிவிப்புக் கூற்று
Iterate --- திரும்பச்செய்
Iterative Statement --- திரும்பச்செய் கூற்று
Jump Statement --- தாவல் கூற்று
Conditional Jump --- நிபந்தனைத் தாவல்
Control Loop --- கட்டுப்பாட்டு மடக்கி
Finite Loop --- முடிவுறு மடக்கி
Infinite Loop --- முடிவிலா மடக்கி
Nested Loop --- பின்னல் மடக்கி
Fetch Instruction --- கொணர் ஆணை
Flow Control --- பாய்வுக் கட்டுப்பாடு
Flush --- வழித்தெடு
Function --- செயல்கூறு
Procedure --- செயல்முறை
Routine --- நிரல்கூறு
Subroutine --- சார் நிரல்கூறு
Module --- கூறுநிரல்
Utility --- பயன்கூறு
Argument --- செயலுருபு
Parameter --- அளபுரு
Counter --- எண்ணி
Analysis --- பகுப்பாய்வு
Analyst --- பகுப்பாய்வர்
System Analyst --- முறைமைப் பகுப்பாய்வு
System Design --- முறைமை வடிவாக்கம்
System Development --- முறைமை உருவாக்கம்
Bug --- வழு
Bebug --- வழுச்சேர்ப்பு
Debug --- வழுநீக்கு
Error --- பிழை
Run Time Error --- இயக்க நேரப் பிழை
Compilation Error --- நிரல்பெயர்ப்புப் பிழை
Error Message --- பிழைசுட்டுச் செய்தி
Error Routine --- பிழை கையாள் நிரல்கூறு
Error handling --- பிழை கையாள்கை
Error Handler --- பிழை கையாளி
Default Value --- முன்னிருப்பு மதிப்பு
Interchange --- மாறுகொள்
Equal --- நிகர்
Equality --- நிகர்மை
Equation --- நிகர்ப்பாடு
Explicit --- வெளிப்படை
Implicit --- உட்கிடை
Interrupt --- குறுக்கீடு
Language Independent Platform --- மொழிசாராப் பணித்தளம்
Platform Independent Language --- பணித்தளம்சாரா மொழி
Thread --- புரி
Multithreading --- பல்புரியாக்கம்
Optimization --- உகப்பாக்கம்
Stream --- தாரை
Synchronization --- ஒத்தியக்கம்
Test --- சோதனை
Testing --- சோதிப்பு
Test Run --- சோதனை ஓட்டம்

(6) செல்பேசி (Cellphone)

Smart phone --- சூட்டிகைப் பேசி
Menu --- பட்டி
Select --- தேர்ந்தெடு
Options --- தேர்வுகள்
Back --- பின்னே
Exit --- நீங்கு
On --- நிகழ் / நிகழ்த்து
Off --- அகல் / அகற்று
Go to --- அங்கு போ
Save --- சேமி
Delete --- அழி
Yes --- ஆம்
Ok --- சரி
No --- இல்லை
Cancel --- விடு
Help --- உதவி
Show --- காண்பி
Switch off --- அணை
Messages --- செய்திகள்
Create message --- செய்தி எழுது
Inbox --- செய்திப் பெட்டி
Drafts --- வரைவுகள்
Outbox --- செல்மடல் பெட்டி
Sent Items --- அனுப்பியவை
Saved Items --- சேமித்தவை
Send --- அனுப்பு
Clear text --- உரை அழி
Settings --- அமைவுகள்
Call settings --- அழைப்பு அமைவுகள்
Phone settings --- பேசி அமைவுகள்
Tone settings --- ஒலி அமைவுகள்
Display settings --- திரைக்காட்சி அமைவுகள்
Time settings --- நேர அமைவுகள்
Message settings --- செய்தி அமைவுகள்
Language settings --- மொழி அமைவுகள்
Security settings --- பாதுகாப்பு அமைவுகள்
General settings --- பொது அமைவுகள்
Voice messages --- குரல் செய்திகள்
Picture messages --- படச் செய்திகள்
Info messages --- தகவல் செய்திகள்
Delete messages --- செய்திகள் அழி
Text messages --- உரைச் செய்திகள்
Multimedia messages --- பல்லூடகச் செய்திகள்
E-mail messages --- மின்னஞ்சல் செய்திகள்
Contacts --- தொடர்புகள்
Search --- தேடு
Add new contact --- புதிய தொடர்பு சேர்
Add new group --- புதிய குழு சேர்
Edit contact --- தொடர்பு திருத்து
Delete contact --- தொடர்பு அழி
Move contact --- தொடர்பு இடம்மாற்று
Copy contact --- தொடர்பு நகலெடு
Mark --- குறியிடு
Mark all --- யாவும் குறியிடு
Unmark --- குறியெடு / குறிநீக்கு
Log --- பதிகை
Call log --- அழைப்புப் பதிகை
Call register --- அழைப்புப் பதிவேடு
Recent calls --- அண்மை அழைப்புகள்
Missed calls --- விடுபட்ட அழைப்புகள்
Received calls --- பெற்ற அழைப்புகள்
Dialled numbers --- அழைத்த எண்கள்
Message recipients --- செய்தி பெறுவோர்
Call duration --- அழைப்புக் காலம்
Message log --- செய்திப் பதிகை
Tones --- ஒலிப்புகள்
Recordings --- பதிவுகள்
Profile --- வரைவாக்கம்
General --- பொது
Silent --- மவுனம்
Discreet --- ஏதேனும்
Loud --- வெளிக்காட்டு / உரத்து
Meeting --- கூட்டம்
Outdoor --- வெளியிடம்
Theme --- அழகாக்கம்
Ringing tone --- மணி ஒலிப்பு
Ringing volume --- ஒலிப்பு அளவு
Vibrating alert --- அதிர்வு உணர்த்து
Message alert tone --- செய்தி உணர்த்து ஒலி
Connectivity --- இணைப்புநிலை
Call --- அழை
Call divert --- அழைப்பு திருப்பு
Automatic redial --- தானே மறுஅழைப்பு
Speed dialing --- விரைவு அழைப்பு
Call waiting --- அழைப்புக் காத்திருப்பு
Automatic keyguard --- தானியங்கு விசையரண்
Security keyguard --- பாதுகாப்பு விசையரண்
Welcome note --- வரவேற்புக் குறிப்பு
Network selection --- பிணையத் தேர்வு
Start-up tone --- தொடக்க ஒலி
Gallery --- கலைக்கூடம்
Images --- படிமங்கள்
Video clips --- நிகழ்படத் துணுக்குகள்
Music files --- இசைக் கோப்புகள்
Media --- ஊடகம்
Camera --- படப்பிடிப்பி
Radio --- வானொலி
Recorder --- பதிப்பி
Organiser --- ஒழுங்கமைப்பி
Clock --- மணிகாட்டி
Alarm clock --- எழுப்பு மணி
Alarm time --- எழுப்பு நேரம்
Alarm tone --- எழுப்பு ஒலி
Repeat alarm --- திரும்ப எழுப்பு
Speaking clock --- பேசும் மணிகாட்டி
Calendar --- நாட்காட்டி
Notes --- குறிப்புகள்
Calculator --- கணிப்பி
Timer --- நேரங்காட்டி
Stopwatch --- நிறுத்து மணிகாட்டி
Collection --- திரட்டு
Wallpaper --- முகப்புப் படம்
Screen saver --- திரைக்காப்பு
Power saver --- மின்காப்பு
Charging --- மின்னேற்றம்
Reminders --- நினைவுறுத்திகள்
Demo --- வெள்ளோட்டம்

கலைச்சொற்களின் பட்டியலை PDF கோப்பாக இங்கே பார்வையிடுக. File --> Save As... தேர்ந்தெடுத்துச் சேமித்துக் கொள்ளலாம். அல்லது இத்தொடுப்பின்மீது வலது கிளிக்கிட்டு Save Target As... தேர்ந்தெடுத்துச் சேமித்துக் கொள்ளலாம்.

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்