|
|||||||||
|
சி# மொழிப் பாடங்கள் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் கணிப்பொறியியல் பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில், சி# மொழியின் அடிப்படைக் கருத்துருக்கள் அனைத்தையும் ஜாவா மொழியோடு ஒப்பிட்டு ஆழமாகவும் விரிவாகவும் எடுத்து விளக்கும் பாடங்கள் எடுத்துக்காட்டு நிரல்களுடன் இப்பகுதியில் வெளியிடப்படும்.
பாடம் 1.1: ஒரு புதிய மொழியின் தேவை
...அந்தந்தக் காலகட்டத்தின் தேவைகளுக்கும் பயன்பாடுகளுக்கும் ஏற்பப் புதிய புதிய மொழிகள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் சில முற்றிலும் புதியன. சில முந்தைய மொழியை மேம்படுத்தி உருவாக்கப்பட்டவை. வேறுசில முந்தைய மொழிகளை அடிப்படையாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டவை. அந்த வகையில் சி# என்கிற புதிய மொழி உருவாக்கப்பட வேண்டிய தேவை என்ன [.....]
பாடம் 1.2: சி# மொழியின் சிறப்புத் தன்மைகள்
...பரவலாகப் பயன்படுத்தப்படும் மொழிகளுள் 100% முழுமையான பொருள்நோக்கு நிரலாக்க மொழி (Object Oriented Programming Language), உலகின் முதல் பொருள்கூறு நோக்கு நிரலாக்க மொழி (Component Oriented Programming Language) என்கிற தனக்கே உரிய சிறப்புத் தன்மைகள் சி# மொழிக்கு உண்டு. [.....]
பாடம் 1.3: மைக்ரோசாஃப்டின் டாட்நெட்
டாட்நெட் அப்ளிகேஷன் உருவாக்கக் கருவிகளை வழங்கும் விசுவல் ஸ்டுடியோ.நெட்டில் சி#, சி++, விசுவல் பேசிக், ஜே#, ஜேஸ்கிரிப்ட் ஆகிய மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன.....இவைதவிர கோபால், ஈபெல், பேர்ல், பைத்தான், ஸ்மால்டாக், மெர்க்குரி, ஸ்கீம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட புரோகிராம்களையும் டாட்நெட்டின் பொதுமொழி இயக்கத்தளத்தில் இயக்க முடியும். [.....]
பாடம் 1.4: சி, சி++ மொழிகளிலிருந்து சி# எவ்வாறு வேறுபடுகிறது?
....ஜாவாவையும் சி# மொழியையும் நேரடியாக ஒப்பிடலாம்....சி, சி++ மொழிகளை சி# மொழியோடு நேரடியாக ஒப்பிட முடியாது. என்றாலும் சி# மொழியின் முன்னோடிகள் என்ற வகையில் சி, சி++ மொழிகளின் கருத்துருக்கள் சி# மொழியில் எந்த அளவுக்கு எடுத்தாளப்பட்டுள்ளன....என்று அறிந்து கொள்வது சி# மொழி பற்றிய சரியான புரிதலுக்கு உதவும். [.....]
பாடம் 1.5: ஜாவா - சி#: ஒற்றுமை வேற்றுமைகள்
சி# மொழி, சி++ மொழியிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்டது. அதேபோல ஜாவா மொழியும் சி++ மொழியை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. எனவே ஜாவாவுக்கும் சி# மொழிக்கும் இடையே பல ஒற்றுமைகளைக் காண முடியும். [.....]
இன்னும் பாடங்கள் விரைவில்... |
|
|||||||
இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்
|