மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்
 

கணிப்பொறி

ஓர் இலக்கியவாதியாகப் பரிணமித்த நான் காலப்போக்கில் ஒரு கணிப்பொறி வல்லுநராய் மாறிப் போனேன். கணிப்பொறி அறிவியலைச் சொந்தமாகவே கற்றுக் கொண்டு அதில் கரை கண்டிருக்கிறேன். கணிப்பொறிப் பாடங்களைப் பத்திரிகைகளில் தமிழிலேயே எழுதியுள்ளேன். கணிப்பொறி அறிவியலின் உயர்நிலைத் தொழில்நுட்பங்களை எளிதில் புரியும்படித் தமிழில் எழுதியுள்ளேன். அவற்றை நூலாகவும் வெளியிட்டுள்ளேன். பல்கலைக் கழக எம்சிஏ மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளேன். தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் எழுதியுள்ளேன்.

பத்திரிகைகளில் வெளிவந்த என்னுடைய பாடங்களைப் படித்து எண்ணற்ற கிராமப் புறத்து மாணவர்கள் பலன் பெற்றுள்ளார்கள். மேலும் பலர் பயன்பெறும் வகையில், கணிப்பொறித் தொழில்நுட்பம் தொடர்பாக நான் எழுதியவற்றைக் குறிப்பாகக் கணிப்பொறியின் அடிப்படைகள், சி, சி++, சி#, ஜாவா, பிணையம் பற்றிய பாடங்களையும், இணையம், கலைச்சொல்லாக்கம் தொடர்பான கட்டுரைகளையும், கலைச்சொல் தொகுப்பையும், பயனுள்ள கேள்வி-பதில்களையும் இணையத்தில் வெளியிட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்